மதுரை: மதுரை பைபாஸ் ரோடு ஐயப்ப சுவாமி கோயிலில், மார்கழி மண்டல பூஜை மற்றும் விளக்கு பூஜை, நேற்று நடந்தது. நவ.,17ல் தொடங்கிய விழா, ஜன.,20 வரை நடைபெற உள்ளது. முக்கிய நிகழ்வான நேற்று, கணபதி ஹோமம், 108 கலசாபிஷேகமும் நடந்தது. ஜன.,14 அன்று, மகர ஜோதி தரிசனமும், ஜன.,20ல் புஷ்பாஞ்சலியும் நடைபெறும். சதாசிவ ஐயப்ப பரிபாலன டிரஸ்டியினர், விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.