காசி விநாயகர் கோவிலில் பால்குடம் எடுத்த முருக பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28டிச 2013 11:12
அவிநாசி: அவிநாசி திருமுருக பக்தர்கள் பேரவை மற்றும் பாத யாத்திரை குழு சார்பில், 36ம் ஆண்டு திருவிழா நேற்று நடந்தது. காசி விநாயகர் கோவிலில், விநாயகருக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு, பால் குட ஊர்வலம் துவங்கியது. நான்கு ரத வீதிகளில் சென்ற ஊர்வலம், அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் நிறைவடைந்தது. அங்கு, பால தண்டாயுதபாணி சுவாமிக்கு மகாபிஷேகம், அலங்கார தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.