சிலைகளை இரண்டு விதமாக வைத்துக் கொள்ளலாம். ஒன்று கருங்கல், உலோகம் போன்றவற்றால் நிரந்தரமாக வைத்துக் கொள்வது, மற்றொன்று மஞ்சள் பொடி, சந்தனம், மண், கோமயம் போன்றவற்றினால் திருவுருவம் செய்து வழிபட்ட பின் கரைத்து விடுவது. இதற்கு க்ஷணிக உருவம் என்று பெயர். இப்படிச் செய்வதற்குக் காரணம், நிரந்தரமான சிலை வைத்து வழிபட எல்லாருக்கும் சாத்தியம் இல்லாதது என்பதால் தான்.