பதிவு செய்த நாள்
30
டிச
2013
06:12
ஸஹஸ்ர ஆதித்ய ஸங்காசம் ஸஹஸ்ர வதனாம்புஜம்!
ஸஹஸ்ர ரதம் ஸஹஸ்ராரம் ப்ரபத்யே ஹம் ஸுதர்சனம்!!
சென்னை ஓம் ஸ்கந்தாஸ்ரம ப்ரதான தெய்வமாம், அகிலாண்ட நாயகியாம், மாதா புவனேஸ்வரி மலரடி பற்றியும், மற்றும் வைதிகப் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள கலிவரத ப்ரும்மாண்ட தெய்வ மூர்த்திகள் அனைவரது திருவடி சரணம் செய்தும், நமது ஆஸ்ரம ஸ்தாபகர், வேதரிஷி, மந்த்ர ஸாஸ்த்ர ஹோம இலக்கண முன்னோடி, ஆன்மீக அருட்குரு பூஜ்யஸ்ரீ ஸத்குரு ஸ்ரீமத் சாந்தானந்த ஸ்வாமிகளின் திவ்யபாதம் பணிந்தும், வரும் ஆங்கிலப் புத்தாண்டு 2014, அனைவருக்கும் ஸகல சவுபாக்கியங்களையும் தடையின்றி தரும் பூச்செண்டாக இருக்க வேண்டி பஞ்சமுக ஹனுமத் ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது. அனைத்து மக்களும் பல்லாண்டு ஆரோக்ய, சுக போகங்களும், யோகங்களும் பெற்று, ஆன்மீக வீர புருஷர்களாக வளமுடன்வாழ வழிசெய்யும் வேள்வியாக, நமது ஆஸ்ரம மரபுப்படி, 01-01-2014 (புதன்கிழமை) ஆங்கிலப் புத்தாண்டுத் துவக்க நாளில் சண்டி யாகசாலையில், மஹா ஸுதர்சன மாலா மந்த்ர ஹோமம் விஸ்தாரமாக நாள் முழுவதும் நடைபெற ஏற்பாடு ஆகியுள்ளது.
மஹா ஸுதர்சன தேவதா மந்த்ரம் சக்ர ராஜம் எனப்படும். உபாசகரும், உறுதுணையாய் உதவி செய்வோரும், உளமுருகி பகை நீங்க, வாழ்வுவளம், வெற்றி, வளர்கீர்த்தி பெறவேண்டுவோர்க்கும், சதுர்வித பலன்களையும் அளிக்க வல்லது இம்மந்த்ரம் என்பது மந்த்ர-யந்த்ர ப்ரயோக சாஸ்த்ர நூல்களின் அறிவுரையும், நம் அனுபவ சித்தமுமாகும். மஹா ஸுதர்சன மந்த்ர ஜப ஹோமங்களின் மூலம் இவ்வுலகில் சாதிக்க முடியாதது எதுவுமில்லை. ஜெய ஜெய ஸ்ரீ ஸுதர்ஸனாய நம: என்று பக்தியுடன் ஸ்மரணம் செய்பவர்களுக்கு பூதப்ரேத பிசாச உபத்ரவம் விலகல், ஆபிசார மற்றும் சத்ரு உபாதைகள் நிவ்ருத்தி, ஸர்வ ரோக நிவாரணம், அப ம்ருத்யு பரிஹாரம், க்ரஹ தோஷ நிவ்ருத்தி, சித்தப்ரமை உன்மத்தாதி சமனம் ஜ்வரம், திருடர் பயம், விதி வச விகாரமாறுதல் அனைத்தும் அறவே மறைதல், ஸகல ஸம்பத்துப்ராப்தி, ஸத்சந்தான ஸம்ருத்தி ஆகியவற்றிற்கு மஹா ஸுதர்சன மந்த்ர ஜப ஹோமப் ப்ரயோகங்கள் பிரபஞ்ச ஸாரம் போன்ற நூல்களில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஹோம, ஸங்கல்ப, பூஜா வைபவங்களில் பங்கு பெற விரும்பும் அன்பர்களும் மற்றும் நன்கொடையாளர்களும் தங்கள் குடும்பத்தாருடைய பெயர்/கோத்ரம்/ நக்ஷத்ரம்/ விலாசம் ஆகிய முழு விபரங்களுடன், அதற்கான பணத்தை காசோலை மூலம் தபாலிலோ, நேரிலோ காரியதரிசி, சென்னை ஓம் ஸ்கந்தாஸ்ரமம் என்கிற பெயரில் ஆஸ்ரம விலாசத்திற்கு அனுப்பி வைக்கவும். வெள்ளி ரøக்ஷ/டாலர் வேண்டுவோர் முன்னதாகவே பணம் செலுத்தி 05-01-2014க்கு மேல் நேரில் ஆஸ்ரமத்திற்கு வந்து, வெள்ளி டாலர்/ ரøக்ஷயைப் பெற்றுக் கொள்ளலாம்.
நிகழ்ச்சி நிரல் : (01-01-2014)
காலை 7.00 மணிக்கு மங்களவாத்யம்
காலை 7.15 மணிக்கு கோமாதா பூஜை
காலை 8.45 மணிக்கு குருவந்தனம்
காலை 9.00 மணிக்கு கணபதி/நவக்ரஹ/நக்ஷத்ர/ ஆவஹந்தி ஹோமம், ஸுதர்சன மாலா மந்த்ர ஹோம ஸங்கல்பம்
காலை 10.00 மணிக்கு ஸுதர்சன மாலா மந்த்ர ஹோமம் ஆரம்பம்
காலை 10.15 மணிக்கு ப்ரத்யங்கிரா அபிஷேக ஸங்கல்பம்/அபிஷேகம்/ அலங்காரம்
காலை 11.00 மணிக்கு பஞ்சமுக ஆஞ்சநேயர் அபிஷேக ஸங்கல்பம்/அபிஷேகம்
மதியம் 12.15 மணிக்கு தீபாராதனை
மதியம் 12.30 மணிக்கு அன்னதானம்
மாலை 4.00 மணிக்கு மேற்படி மாலா மந்த்ர ஹோமம் தொடர்ச்சி
மாலை 5.00 மணிக்கு பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு விசேஷ அலங்காரம்
இரவு 7.30 மணிக்கு மஹா பூர்ணாஹுர்தி
இரவு 8.30 மணிக்கு மஹா மேருவிற்கு ஹோம கலசாபிஷேகம்/மண்டகப்படி ப்ரஸாதம் விநியோகம்.
த்யான மந்த்ரம் :
கட்கம் சூல மஹீருஹா சல மஹாபாசாங்குசான் பாஹுபி:
சின்முத்ராம் ப்ருதுபிண்டி பாலமபி கட்வாங்கம் ததா முண்டிகாம்
பிப்ராணம் ப்ராணதாத்தி பஞ்சனபடும் ரம்யைர் முகை: பஞ்சபி:
யுக்தம் பக்தஜனேஷ்டதான நிரதம் வீராஞ்சநேயம் பஜே!
ராமாயண காதையில் (அழகிய) சுந்தரகாண்டத்தின் கர்த்தாவும், கிழக்குத் திசை நோக்கி வானர முகம் கொண்டு அறிவாற்றலை அளிப்பவராகவும், மேற்கு திசை நோக்கி கருடமுகம் தரித்து வேத ஸ்வரூபனான ஸ்ரீமந் நாராயண தத்துவத்தை விளக்குபவராகவும், வடதிசை நோக்கி வராஹ முகம் கொண்டு செயற்கறிய செயல்களைப் புரிபவராகவும், தென்திசை நோக்கி ந்ருஸிம்ஹ முகம்கொண்டு பக்த ரக்ஷகத் தன்மையைக் கொடுத்தருள்பவராகவும், மேல் (வான்) நோக்கி ஹயக்ரீவர் (குதிரை) முகம் கொண்டு ஸகல வித்யைகளையும் அளிப்பவராக, நமது சென்னை ஓம் ஸ்கந்தாஸ்ரமத்தில், ஸத்குரு ஸ்ரீமத் சாந்தானந்த ஸ்வாமிகளின் பரிபூர்ண அநுக்ரஹத்துடன், சுமார் 12 அடி உயரத்தில் மிகப்ரும்மாண்ட சிலா விக்ரஹமாக பஞ்சமுக ஆஞ்சநேயர் நின்று பக்தர்களுக்கு அருளாசி வழங்கிக் கொண்டுள்ளார்.
மேலும், பஞ்சமுக ஆஞ்சநேயரிடம் நம் பக்தி ஸ்ரத்தையான வழிபாட்டால், சனைச்சர பகவானினால் ஏற்படும் தடைகள்/பீடைகள் நிச்சயம் விலகும் என்பதும் நிதர்ஸனம்.
இப்பேற்பட்ட, ஸர்வ வல்லமை படைத்த பஞ்சமுக ஆஞ்சநேயரின் 9-ம் ஆண்டு ஜெயந்தி விழா. வரும் 01-01-2014 (விஜய வருஷம், மார்கழி மாதம் 17-ம்தேதி) புதன்கிழமை, நமது ஆஸ்ரமத்தில் விசேஷ அபிஷேகம் காலை 11.00 மணிக்கும், விசேஷ அலங்காரம் மாலை சுமார் 5.00 மணி அளவில் வெகு விமர்சையாக நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சுதர்ஸன ஹோமம்/ ஹனுமத் ஜெயந்தி நன்கொடை விபரம் :
1. கோ மாதா பூஜை 250/-
2. ஒரு நாள் யாகசாலை வைதீக சம்பாவனை (11பேர்) 22,000/-
3. யாகத்திற்கு ஒருநாள் உபயம் 5,001/-
4. ஸமஷ்டி ஹோம ஸங்கல்பம் 1,001/-
5. வஸ்த்ரம் 1 செட் (ஒரு நாளைக்கு 11 செட் தேவை) 351/-
6. நெய் (2 டின்) 4,000/-
7. ஹோம திரவியங்கள் 2,001/-
8. அன்னதானம் 2,001/-
9. அனைத்து சன்னதிகளுக்கும் விசேஷ புஷ்ப அலங்காரம் 5,001/-
10. யாகத்திற்கு புஷ்பம்/மாலை/பழங்கள் 2,001/-
11. ப்ரத்யங்கிரா அபிஷேக ஸங்கல்பம் 601/-
12. பஞ்சமுக ஆஞ்நேயர் அபிஷேக ஸங்கல்பம் 1,001/-
13. பஞ்சமுக ஆஞ்நேயர் விசேஷ அலங்கார உபயம் 1,001/-
14. ஸமஷ்டி வடைமாலை உபயம் 1,001/-
15. மண்டகப்படி ப்ரசாத விநியோகம் 501/-
16. சுதர்ஸன வெள்ளி ரøக்ஷ 450/-
17. சுதர்ஸன வெள்ளி டாலர் 750/-
18. ஹோம ப்ரசாதம் 201/-
குறிப்பு: (01-01-2014 அன்று அமாவாசையை முன்னிட்டு, காலை 10.15 மணியளவில் ப்ரத்யங்கிராதேவிக்கு விசேஷ அபிஷேக/ அலங்காரம் நடைபெறும். )
சென்னை ஓம் ஸ்கந்தாஸ்ரமம்
நெ. 1, கம்பர் தெரு, மஹாலட்சுமி நகர், சேலையூர், சென்னை - 600 073
தொ.பே. 2229 0134/ 2229 3388/ 9444629570