மருதமலை கோயிலில் ரோப் கார் வசதி ஏற்படுத்த மாநகராட்சி கூட்டத்தில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கோவை மாநகராட்சி மாமன்றத்தின் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில், மேற்கு மண்டலத் தலைவர் சாவித்ரி பார்த்திபன் மருதமலை முருகன் கோயிலுக்கு ரோப் கார் வசதி ஏற்படுத்திட வேண்டும் என்றார். இதற்கு பதில் அளித்து மேயர் செ.ம.வேலுசாமி பேசுகையில், ""மருதமலை கோயிலில் ரோப் கார் வசதி ஏற்படுத்துவது தொடர்பாக சிறப்பு தீர்மானம் நிறைவேற்றி அரசின் கவனத்தின் கொண்டு செல்லப்படும் என்றார். அதைத் தொடர்ந்து, மருதமலைக்கு ரோப் கார் வசதி ஏற்படுத்துவது தொடர்பாக சிறப்பு தீர்மானம் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து உறுப்பினர்கள் வரவேற்பு தெரிவித்தனர்.