பதிவு செய்த நாள்
01
ஜன
2014
12:01
ராசிபுரம்: ராசிபுரம் ஐயப்ப பக்தர்கள் சங்கம் சார்பில், பெருமாள் கோவிலில் உள்ள ஐயப்ப ஸ்வாமிக்கு, 53ம் ஆண்டு லட்சார்ச்சனை பெருவிழா நடந்தது. அதையொட்டி, ஐயப்ப ஸ்வாமிக்கு சிறப்பு பூஜை, மகா கணபதி ஹோமம், அபிஷேக ஆராதனைகள் நடந்தது. தொடர்ந்து, பெண்கள் பங்கேற்ற, திருவிளக்கு பூஜை நடந்தது. நடப்பாண்டில், 18 ஆண்டுகள் ஐயப்பன் கோவிலுக்கு சென்ற ஐயப்ப பக்தர்களுக்கு, ராஜகுரு ராமமூர்த்தி அருளாசி வழங்கினார். ஸ்வாமிக்கு தீபராதனை, கன்னி பூஜை, ஸ்வாமி திருவீதி உலா நடந்தது.