கள்ளழகர் கோவிலில் பகல்பத்து உற்சவம் இன்று காலை தொடங்குகிறது. பெருமாள் மோகனி அவதாரத்தில் பக்தர்களுக்கு சேவைசாதிக்கிறார். தினசரி பெருமாள் புறப்பாடும் நாலாயிரம் திவ்யப்பிரபந்த பாசுரங்கள் பாடுவதும் நடைபெறும். ஜனவரி 11-ஆம் தேதி வைகுண்ட ஏகாதசியையொட்டி காலை 4 மணிக்கு பெருமாளுக்கு ஆயிரம் அண்டாக்களில் அக்காரஅடிசல் அமுதுபடைக்கும் வைபவம் நடைபெறும். இதையடுத்து 5.30 மணியிலிருந்து 6,15 மணிக்குள் பெருமாள் பல்லக்கில் சொர்க்கவாசல் வழியாக எழுந்தருள்கிறார்.