ஆங்கிலப் புத்தாண்டையொட்டி, தருமபுரியில் கிறிஸ்தவ தேவாலயங்களில் நேற்று நள்ளிரவு சிறப்புப் பிரார்த்தனை நடைபெற்றது. நாடு முழுவதும் நேற்று நள்ளிரவு கோயில்களில் வழிபாடு, தேவாலயங்களில் சிறப்புப் பிரார்த்தனை,என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தருமபுரியில் உள்ள கத்தோலிக்க திருச்சபையில் சிறப்புப் பிரார்த்தனை நடைபெற்றது. முன்னதாக, இரவு 11 மணியிலிருந்து 11.30 வரை 2013-ஆம் ஆண்டுக்கு நன்றி தெரிவித்து, பிரியா விடை கொடுக்கப்பட்டது. இதையடுத்து, 11.30-மணியிலிருந்து 12 மணி வரை 2014 ஆம் ஆண்டை வரவேற்று சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.