திருவதிகை சரநாராயண பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலிப்பு!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01ஜன 2014 03:01
பண்ருட்டி: திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் அமாவாசை, ஆங்கிலப் புத்தாண்டு மற்றும் அனுமன் ஜெயந்தியையொட்டி மூலவர் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். காலை 5:00 மணிக்கு நடை திறப்பு 5:30 மணிக்கு விஸ்வரூப தரிசனம் நடந்தது. 6:00 மணி முதல் மூலவர் பெருமாள் முத்தங்கி சேவையில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். உற்சவர் பெருமாள் திருக்கண்ணாடி அறையிலும், மூலவர் தாயார், சயனநரசிம்மர் சுவாமிகளும் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு அனுமன் சுவாமிக்கு வெண்ணைக் காப்பு அலங்காரம் நடந்தது.