இளமையின் வேகத்தைக் கடந்து, வாழ்வின் யதார்த்தத்தை உணரும் காலம் வரத் தான் போகிறது. சிக்கல், நெருக்கடி, நோய், இறப்பு என ஏதாவது ஒருவிதத்தில் வாழ்க்கைப் பயணத்தில் குறுக்கிடும்போது, மனம் அமைதியை நாடத் தொடங்கும். அந்த நேரத்தில் ஆன்மிகம் ஒன்றே ஊன்றுகோல் போல துணை நிற்கும்.