மதுரை: மதுரை மீனாட்சி அம்மனை தரிசிக்க வரும் பக்தர்களிடம் பாகுபாடு காட்டக் கூடாது என கோயில் நிர்வாகத்துக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது. மதுரையைச் சேர்ந்த பக்தர் ஒருவர் மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் மார்கழி மாத திருவனந்தல் மற்றும் திருப்பள்ளி எழுச்சி பூஜைகளின் ரூ.2 ஆயிரம் சிறப்பு தரிசன பாஸ் வைத்திருப்போருக்கு முன்னுரிமை வழங்குவதால் இலவச தரிசன பக்தர்கள் பாரபட்சமாகவும் அவமரியாதையாகவும் நடத்தப்படுவதாக குறிப்பிட்டு இருந்தார். இதையடுத்து நீதிபதிகள் அமர்வு பிறப்பித்த இடைக்கால உத்தரவில் கோயிலில் பக்தர்களுக்கு பாகுபாடு காட்டக்கூடாது. இலவச தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் சுதந்திரமாக தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும். கோயிலில் பாதுகாப்புக்கு போதுமான பெண் போலீஸார் நியமிக்கப்பட வேண்டும். கோயிலில் கூடுதலாக குடிநீர் வசதி ஏற்படுத்த வேண்டும் என உத்தரவிட்டனர்.