பதிவு செய்த நாள்
08
ஜன
2014
10:01
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில், மார்கழி மாத எண்ணைய் காப்பு உற்சவம், நேற்று துவங்கியது.இதையொட்டி காலை, ஆண்டாள் தங்க பல்லக்கில், மாடவீதி வழியாக ராஜகோபுர வாசலில், போர்வை படி களைதலும், திருவடி விளக்கமும் நடந்தது. மாலையில் ஆண்டாளுக்கு, எண்ணெய் காப்பு நிகழ்ச்சியும், இரவு, ஆண்டாள் துளசி வாகனத்தில் புறப்பாடு நடந்தது. எண்ணைய் காப்பு உற்சவம், ஜன., 14 வரை நடக்கவுள்ளது.