கரூர் கல்யாணபசுபதீஸ்வரர் கோவிலில் பிரமாண்ட ஆலயமணி!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09ஜன 2014 11:01
கரூர்: புனரமைக்கப்பட்ட கரூர் கல்யாணபசுபதீஸ்வரர் கோவிலில் அமைப்பதற்காக கொடையாளர் ஒருவரால் பிரமாண்டமான வெங்கலமணி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. சுமார் மூன்று லட்ச ரூபாய் மதிப்பில் செய்யப்பட்டுள்ள இம்மணி அடிக்கும் போது இரண்டு கிலோ மீட்டர் தூரத்துக்கு எதிரொலிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆலயமணியை மாட்டுவதற்காக கோவில் அம்மன் சன்னதி அருகே மணிக்கூண்டு கட்டப்பட்டுள்ளது.