திருப்பரங்குன்றம் சுவாமிக்கு மண்பானை பொங்கல் படையல்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15ஜன 2014 10:01
திருப்பரங்குன்றம்,: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப் பொங்கலை முன்னிட்டு, சுவாமிகளுக்கு மண்பானையில் பொங்கல் படைக்கப்பட்டது. கோயிலில் வழக்கமாக தினமும் வெண்கல பானையில் பிரசாதம் தயாரிக்கப்பட்டு, சுவாமிகளுக்கு படைக்கப்படும். தைப் பொங்கலை முன்னிட்டு, கோயில் மடப்பள்ளியில் மண்பானையில் பொங்கல் தயாரித்து, மூலவர்கள் சுப்பிரமணிய சுவாமி, கற்பக விநாயகர், துர்க்கை, சத்தியகிரீஸ்வரர், பவளக்கனிவாய் பெருமாள், கோவர்த்தனாம்பிகை அம்மன் சன்னதிகளில் பொங்கல் படைக்கப்பட்டது. பூஜைகள், தீபாராதனைகள் நடந்தது.