ரிக் வேதத்தில் சூரியன் ஏழுகுதிரைகள் பூட்டிய ரதத்தில் பவனி வருவதாக கூறப்பட்டுள் ளது. இந்த ரதத்தின் சக்கரங்களே, காலச்சக்கரம் ஆகும். ஏழு குதிரைகள் வாரத்தின் ஏழு நாட்களாக கணக்கிடப்படுகிறது. காலத்தை நிர்ணயிக்கும் கடவுளாக சூரியன் உள்ளார். ஒருவன் இறந்த பிறகு, அவனது ஆத்மா, சூரியவட்டத்தை அடைந்து விடும் என்று வேதகால மக்கள் நம்பினர்.