பதிவு செய்த நாள்
16
ஜன
2014
11:01
பவானி: பவானி, தேவபுரம் ஐயப்பன் கோவிலில், தைப்பொங்கல் மற்றும் மகர ஜோதி உற்சவ விழா நடந்தது. பவானி, தேவபுரம் பகுதியில் ஐயப்பன் கோவிலில் மூலதெய்வமான தர்மசாஸ்தா, அவரது மூர்த்தியான ஸ்ரீஐயப்பன் ஒரே இடத்தில் அருள்பாலிக்கின்றனர். இக்கோவிலில், மகரஜோதி திருவிழா, தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை தொடர்ந்து, கோவிலில் உள்ள அனைத்து மூர்த்திகளுக்கும், சிறப்பு அபிஷேக ஆராதனை, கோவில் குருசாமி ஜெயராமன் செய்தார். 14ம் தேதி மாலை, 6 மணிக்கு சுவாமிகளுக்கு சிறப்பு மஹா தீபாரானையும், அன்னதானம் நடந்தது. இரவு, 7 மணிக்கு மலர் மற்றும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில், ஸ்ரீதர்மசாஸ்தா, ஸ்ரீஐயப்பன் நகர்வலம் புறப்பட்டது. இந்த நகர் வலத்தில், உற்சவ மூர்த்திகளுக்கு முன், இயந்திர புலி வாகனம், நரசிம்மர் காட்சி, அனுமான் காட்சிகள் வலம் வந்தது. செண்டை வாத்தியங்கள் முழங்க, பவானி நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஐயப்ப சுவாமிகள் ஊர்வலம் சென்ற து. 100க்கும் மேற்பட்ட பெ ண்கள் கையில், விளக்கு ஏந் தி ஊர்வலத்தில் சென்றனர். ஏற்பாடுகளை தேவபுரம், ஸ்ரீஐயப்பன் கோவில் குருசாமி மற்றும் ஸ்ரீசாஸ்தா சேவா டிரஸ்ட் உறுப்பினர்கள் செய்து இருந்தனர். அ.தி.மு.க., நகர செயலாளர் கிருஷ்ணராஜ், தி.மு.க., நகர செயலாளர் நாகராசன் மற்றும் அக்னி ராஜா உட்பட பலர் பங்கேற்றனர்.