திருப்போரூரில் கந்தசுவாமி கோவிலில் பால்குடவிழா கோலாகலம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17ஜன 2014 01:01
திருப்போரூர்: திருப்போரூரில் கந்தசுவாமி கோவிலில் 1008 பால்குடவிழா விமர்சையாக நடந்தது. திருப்போரூரில் அறுபடை வீட்டிற்கு நிகராக போற்றப்படும் கந்தசுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் கந்தன் வழிபாட்டு மன்றத்தினர் 48 நாட்கள் விரதம் இருந்து, பொங்கல் நாளில் பால்குடம் எடுக்கின்றனர். அந்த வகையில் பால்குடவிழா நேற்றுமுன்தினம் காலை 10.00 மணிக்கு தொடங்கி கிழக்கு மாடவீதி, மேற்கு மாடவீதி, அய்யம்பேட்டை தெரு, செங்கல்பட்டு சாலை, எம்.ஜி.ஆர்.நகர், வடக்கு மாட வீதி வழியாக பால்குடம் ஊர்வலமாக கோவிலுக்கு 12.00 மணிக்கு வந்தடைந்தது. பக்தர்கள் கந்தசுவாமிக்கு பால் அபிஷேகம் செய்தனர். ஜெர்மன் நாட்டை சேர்ந்த பக்தர் ஒருவர் தனது குழந்தை உடல்நலம் பெற பிரார்த்தனையாக அவர் பால்குடம் எடுத்து வந்தார். விழாவையொட்டி காவடிகளும் எடுத்து வந்தனர்.