ஆண்களுக்கு உகந்த நாள் இல்லை: தெருக்களில் விளக்கேற்றி வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22ஜன 2014 11:01
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை பகுதியில் தை 1ம் தேதி ஆண்களுக்கு உகந்த நாள் இல்லை என்ற வதந்தியால் அகல் விளக்கேற்றி பெண்கள் வழிப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த ஆண்டு தை 1ம் தேதி ஆண்களுக்கு உகந்த ஆண்டு இல்லை. ஆண்களுக்கு விபரீதம் ஏற்படும் என்ற அச்சம் உளுந்தூர்பேட்டை பகுதி மக்களிடையே தொற்றியது. இதற்கு பரிகாரமாக வீட்டில் எத்தனை ஆண்கள் இருக்கிறார்களோ அத்தனை விளக்குகளை வீட்ட வாசலில் ஏற்ற வேண்டும் என்றும் வதந்தி காட்டு தீயை போல் பரவியது. உளுந்தூர்பேட்டை சின்ன தெரு உள்ளிட்ட பல்வேறு தெருக்களில் நேற்று மாலை 6 மணிக்கு பெண்கள் தங்களது வீடுகள் முன்பு அகல் விளக்கேற்றி பூஜை செய்து வழிபட்டனர். விளக்குகள் அணைந்துவிடாமல் இருப்பதற்காக விளக்கை சுற்றி செங்கற்க்களை அடுக்கி வைத்தனர். இச்சம்பவம் உளுந்தூர்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.