பதிவு செய்த நாள்
23
ஜன
2014
11:01
மதுரை: பதினைந்து ஆண்டுகளுக்கு மேல் பணி செய்த அர்ச்சகர்களுக்கு, முதுநிலை, இடை நிலை கோயில் என பிரித்து ஊக்கத்தொகை, ஊதிய உயர்வு வழங்க வேண்டும், என, திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் ஸ்தானிகர் எஸ்.கே.ராஜா பட்டர் வலியுறுத்தினார். அவர் கூறியதாவது: கோயில்களில் காலியிடங்களில் பணியாளர்களை நிரப்பி, நிரந்தரம் செய்ய வேண்டும். உள்துறைப் பணியாளர்களுக்கு ஒரே திட்டத்தில் சம்பளம் நிர்ணயிக்க வேண்டும். கோயிலில் செய்ய வேண்டிய கிரியைகள், மாற்றங்கள் குறித்து ஆராய்ந்து ஆலோசனைகள் வழங்க ஆகம வல்லுனர் குழு அமைக்க வேண்டும். தி.மு.க., ஆட்சிக்கு வரும் போது, இசைக் கலைஞர்களுக்கு மட்டும் நிலுவைத்தொகை, ஊதிய உயர்வு வழங்குகிறது. கோயில்களில் யானை இல்லாத குறையை தீர்க்க வேண்டும், என்றார்.