திருப்பரங்குன்றம்: ஆண்டுதோறும் தை மாதத்தில், திருப்பரங்குன்றம் ஜி.எஸ்.டி. ரோட்டல் உள்ள தெப்பக்குளத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை எழுந்தருளுவர். கடந்த ஆண்டு ஆழ்குழாயில் தண்ணீர் இல்லாததால், மிதவை தெப்பம் அமைக்கப்பட்டது. இந்த ஆண்டு ஆழ்குழாய் மூலம் தண்ணீர் நிரப்பப்பட்டு வருகிறது. கோயில் துணை கமிஷனர் பச்சையப்பன் கூறுகையில்,போதுமான அளவு தண்ணீர் நிறைந்தால், தெப்பம் சுற்றிவரும். இல்லையெனில், இந்த ஆண்டும் மிதவை தெப்பத்தில் திருவிழாதான் நடக்கும், என்றார்.