ஈரோட்டிலிருந்து 15 கி.மீ. தொலைவிலுள்ள பவானி சங்கமேஸ்வரர் திருக்கோயிலின் மூலவர், அமிர்தலிங்கேஸ்வரர். அந்த லிங்கத்தை ஆவுடையாரிலிருந்து பிரித்து எடுத்து மீண்டும் வைக்க முடியும். குழந்தை இல்லாதவர்களும், வயிற்று வலியால் அவதிப்படுபவர்களும் இந்த லிங்கத்தை வழிபட்டு பயன்பெறுகின்றனர்.