பொள்ளாச்சி : பொள்ளாச்சி மகாலிங்கபுரம் பாரதிய வித்யா மந்திர் பள்ளி வளாகத்தில் உள்ள பாபா கோவில் நான்காம் ஆண்டு விழாவை யொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. விழாவையொட்டி, கிருஷ்ண பகவான் மற்றும் ஷீரடி சாய்ராம் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். காலை 8:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை சிறப்பு அலங்காரம், ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து, பள்ளி வளாகத்தில், கோவை நாக சாயி மந்திர் பாலகிருஷ்ணன் மற்றும் பக்தர்கள் குழுவினரின், சிறப்பு சொற்பொழிவு மற்றும் பஜனை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.