பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே சின்னாம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட மின்நகர், அண் ணா நகரில், நிலாச்சோறு விழா மூன்று நாட்கள் விமரிசையாக நடந்தது. விழாவையொட்டி, முருகப்பெருமான் திருவுருவப்படத்தை வைத்தும்; தேரை யானை இழுத்து செல்வதுபோன்ற கோலமிட்டும்; அந்த கோலத்தை சுற்றி வந்து பெண்கள் பாடல்களை பாடிய படியே கும்மியடித்து கொண்டாடினர்.இதனைத்தொடர்ந்து, முருகப்பெருமானுக்கு படையல் செய்தும் வழிபாடு நடந்தது. மூன்று நாட்கள் நடந்த விழாவில், அந்தந்த பகுதியை சேர்ந்த மக்கள் தங்கள் வீட்டிலிருந்து உணவை கொ ண்டு வந்து பகிர்ந்து, அன்னதானம் போன்று சாப்பிட்டு, மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். எத்தனை வேற்றுமைகள் இருந்தாலும், அதனை மறந்து, அனைவரும் அன்பையும், சந்தோஷத்தையும் பகிர்ந்துகொள்ளும் வகையில், கிராமப்புறங்களில் கொண்டாடப்படும் இந்த நிலாச்சோறு விழா தற்போது நகரப்பகுதியைச்சேர்ந்த மக்களும் ஆர்வமுடன் கொண்டாடினர்.