வேதத்தில் தத்துவத்தை உபதேசிக்கும் பகுதி உபநிஷதம். உபநிஷத் என்ற சொல்லுக்கு,அருகில் உட்கார்ந்து கொள்வது என்று பொருள். உபநிஷதம் ஒருவனை கடவுளுக்கு அருகில் அழைத்துச் செல்லும் தகுதி படைத்தது. வேதத்தில் 1180 சாகைகள் உண்டு. ஒரு சாகைக்கு, ஒரு உபநிஷதம் வீதம் 1180 உபநிஷதங்கள் இருந்தன. ஆனால், நம் கையில் கிடைத்தது 108 மட்டுமே. இந்த 108க்கும் உரை எழுதியவர், உபநிஷத் பிரமேந்திராள். இதில் முக்கியமானவை பத்து. அவற்றைதசோபநிஷத் என்று குறிப்பிடுவர். இந்த பத்தில் விவேகானந்தருக்கு பிடித்தமானது கடோபநிஷத். மரணத்திற்குப் பின் மனிதனின் நிலை பற்றி எமதர்மனுடன் வாதிடும் சிறுவன் நசிகேதஸ் பற்றி விவேகானந்தர் அடிக்கடி தன் பேச்சில் குறிப்பிட்டுள்ளார். எழுமின்! விழிமின்! குறிக்கோளை எட்டும்வரை ஓயாது உழைமின்! என்பது விவேகானந்தரின் குறிப்பிடத்தக்க பொன்மொழி. இந்த பொன்மொழியை, கடோபநிஷத்தில் இருந்தே விவேகானந்தர் எடுத்துக் கையாண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.