சோழமன்னன் முசுகுந்தன் திருவாரூரை ஆண்டான். அப்போது, வலன் என்னும் அசுரன் தேவர்களின் தலைவனான இந்திரனுக்கு தொல்லை கொடுத்தான். பூலோகத்தில் உள்ள முசுகுந்தனின் உதவியோடு, அசுரனை வென்றான் இந்திரன். இதற்கு பரிசாக இந்திரன், ஏழு தியாகராஜர் சிலைகளை முசுகுந்தனுக்கு வழங்கினான். அவற்றுக்கு சப்த விடங்கர் (உளியால் செதுக்கப்படாத சிலைகள்) என்று பெயர். நடனக்கலையின் சிறப்பினை உணர்த்தும் இச்சிலைகளை, முசுகுந்தன் திருவாரூர் உள்ளிட்ட ஏழு தலங்களில் பிரதிஷ்டை செய்தான். மண்ணால் ட்டப்பட்டிருந்த திருவாரூர் கோயிலை, கற்கோயிலாக மாற்றியவர் ராஜராஜ சோழனின் பாட்டியான செம்பியன் மாதேவி. கைலாயத்தில் வசிக்கும் பார்வதியின் தோழிகளான அனிந்திதை, கமலினி ஆகிய இருவரின் சிலைகள் இங்குண்டு. தோழிகள் என்றால் சும்மாவா?