முருகன் கோயில்களில் உள்ள குளங்களை சரவணப்பொய்கை என்று குறிப்பிடுவது ஏன்?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
31ஜன 2014 03:01
இமயமலைத்தொடரிலுள்ள மாந்தாதா மலையில் முருகன் அவதரித்த சரவணப் பொய்கை உள்ளது. சரவணம் என்றால் நாணல்காடு என்று பொருள். அங்குள்ள ஆறு தாமரைகளில், சிவனின் நெற்றிக்கண்ணில் இருந்து புறப்பட்ட தீப்பொறி குழந்தைகளாகத் தவழ்ந்தன என்கிறது கந்தபுராணம். இதன் அடிப்படையில் முருகன் கோயிலில் இருக்கும் குளங்களை சரவணப்பொய்கை என்று குறிப்பிடுகின்றனர்.