செஞ்சி: செஞ்சி வட்ட மதுர கவி ஆழ்வார் திரு நட்சத்திர பரிபாலன சபையின் மாத வைணவ மாநாடு செஞ்சி ஏ.என்.ஏ., மினி ஹாலில் நடந்தது. ஜனார்த்தனன் தலைமை தாங்கினார். துணை தலைவர் டாக்டர் ரமேஷ்பாபு முன்னிலை வகித்தார். சரஸ்வதி ஆண்டாள் துதிபாடினார். வெங்கட்ராமன் வரவேற்றார். வேங்கிக்கால் ஜெயராமன் சீதா கல்யாணம் குறித்து சொற்பொழிவாற்றி னார். உபயதாரர்கள் தமிழரசி, ஆண்டாள் மற்றும் சபை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.