பலி என்றால் உயிர்ப்பலி என்று அர்த்தம் கொள்வது கூடாது. இந்த சொல்லுக்கு வழிபாடு என்ற பொருளும் உண்டு. ஒவ்வொரு கால பூஜை முடிவிலும், விடுபட்ட எல்லா தெய்வங்களுக்கும் நைவேத்யம் அளிக்கும் விதத்தில், பலிபீடத்தில் சாதம் வைத்து நிவேதிப்பார்கள். பலிபீடத்தை வழிபடும் போது, நம்மிடமுள்ள குற்றங்குறைகளை பலியிடுவதாக எண்ணி வணங்க வேண்டும்.