சாலிகிராமம் தன்வந்திரி மகாவிஷ்ணுவின் அம்சம். கையில் சங்கு, சக்கரம், அமுத கலசம், அட்டைப்பூச்சி ஏந்தி அருள்பவர். எவ்வளவு கடும் நோயாக இருந்தாலும், குணப்படுத்தி அருள்பவர். மூலிகைகள் கொண்டு தன்வந்திரி மகா மந்திரத் தால் ஹோமம் செய்ய, நோய்நொடி நீங்குவதோடு ஆயுளும் அதிகரிக்கும்.