Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஏழுமலையானை இனி அருகில் சென்று தரிசிக்கலாம்! ஏழுமலையானை இனி அருகில் சென்று ...
முதல் பக்கம் » திருப்பதி தரிசனம் » செய்திகள்
ஏழுமலையானுக்கு பட்டு வஸ்திரங்கள் பக்தர்கள் வழங்கலாம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

06 பிப்
2014
10:02

சென்னை: திருப்பதி ஏழுமலையானுக்கு, பக்தர்கள், பட்டு வஸ்திரங்களை நேரடியாக வழங்கலாம், என, திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர், கண்ணையா கூறினார். இதுகுறித்து, சென்னையில் நிருபர்கள் சந்திப்பில், கண்ணையா கூறியதாவது: திருப்பதி வெங்கடேச பெருமாளுக்கு, ஒப்பந்ததாரர் மூலம் வழங்கப்படும், பட்டு வஸ்திரங்கள், தரம் குறைந்ததாக இருக்கிறது எனவும், ஒரு பட்டு வஸ்திரம், 43 ஆயிரத்து 800 ரூபாய்க்கு வாங்கப்பட்ட போதும், உரிய பட்டு முத்திரை, சரிகைகளில், தங்கம், செம்பு, வெள்ளி கலவை, ஒப்பந்தப்படி சரியாக இருக்குமா என்பதில் சந்தேகமாக இருக்கிறது என, அறங்காவலர்கள் குழு கூட்டத்தில், பலமுறை வலியுறுத்தி வந்தேன். ஒப்பந்தம் வெளிப்படையாக இருந்தால், தரமான பொருட்கள் தேவஸ்தானத்திற்கு, குறைந்த விலையில் பெற முடியும். வெங்கடேச பெருமாளுக்கு பட்டு வஸ்திரங்கள் பக்தர்கள் மூலமும் பெறலாம் எனவும் வலியுறுத்தினேன். கோரிக்கையை, அறங்காவலர் குழு ஏற்றுக்கொண்டது. இதையொட்டி, வெங்கடேச பெருமாளுக்கு அணிவிக்கப்படும் பட்டு வஸ்திரத்திற்கான உரிய பட்டு முத்திரை, சரிகைகளில், செம்பு, வெள்ளி மற்றும் தங்கம் ஆகியவற்றின் கலவை தரம் குறித்து, தேவஸ்தான நிர்வாகம் தர ஆய்வு செய்யத் துவங்கியுள்ளது. வெங்கடேச பெருமாளுக்கு அணிவிக்கப்படும், பட்டு வஸ்திரங்கள், தேவஸ்தான நிர்வாகத்தின் தரக் கட்டுப்பாட்டிற்கு உட்பட்டு, உரிய பட்டு முத்திரையுடன், பட்டு அங்கவஸ்திரங்களை பக்தர்கள் வழங்கலாம். இதற்கு, www.tirumala.org என்ற, தேவஸ்தான இணையதள முகவரியில், பக்தர்கள் தொடர்பு கொண்டு, தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.தேவஸ்தானத்திற்கு, 3 கோடி ரூபாய்க்கு மேல் பொருட்கள் வாங்கப்படும் போது, ஒப்பந்தம் பெறுவது குறித்து, இந்திய அளவில் செய்தித்தாள்களில் விளம்பரம் செய்யவும், அறங்காவலர் குழு ஏற்றுக் கொண்டுள்ளது. திருப்பதியில், அரிசி வகைகளை பாதுகாத்து வைப்பதற்கு, 5.30 கோடி ரூபாய் செலவில் குடோனும், முந்திரி, பாதாம், உலர்ந்த திராட்சை உட்பட, இதர பொருட்களை சேமித்து வைப்பதற்கு, பாதுகாப்பாக, 5.70 கோடி ரூபாய் செலவில் குளிர்பதன குடோன் ஒன்றும் கட்டப்பட உள்ளது. பக்தர்களுக்கு வழங்கப்படும் லட்டின் தரம் உயர்த்தப்பட்டுள்ளதால், ஆண்டிற்கு, 62 கோடி ரூபாய் வரை தேவஸ்தானத்திற்கு நஷ்டம் என்றாலும், பக்தர்களின் நலன் கருதி, இலவச லட்டு மற்றும் விற்கப்படும் லட்டு அளவு குறைக்கப்படாமல் வழங்கவும், நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு, கண்ணையா கூறினார்.

 
மேலும் திருப்பதி தரிசனம் செய்திகள் »
temple news
திருப்பதி : திருப்பதி திருமலை பிரம்மோற்சவ விழாவின் எட்டாவது நாளான இன்று(செப்.,20ல்) தேரோட்டம் ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலை பிரம்மோற்சவ விழாவின் ஏழாவது நாளான இன்று (செப்.,19)காலை மலையப்பசாமி சூரிய பிரபை ... மேலும்
 
temple news
திருப்பதி : திருமலையில் நேற்று நடந்த கருடசேவையை காண, ஆயிக்கணக்கான பக்தர்கள், மாடவீதியில் குவிந்தனர். ... மேலும்
 
temple news
திருமலை: இந்து தர்மார்த்த சமிதியின், புதிய வெண்பட்டுக்குடைகள், திருமலை திருப்பதி வேங்கடமுடையான் ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார், திருமலை பிரம்மோத்ஸவ 5ம் நாளில் ஏழுமலையானுக்கு அணிவிக்க ஆண்டாள் சூடிகளைந்த மாலை, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar