ரூபம் (உருவம்), அரூபம் (உருவமற்றது), அருவுருவம் (லிங்கம்) ஆகிய வடிவங்களில் காட்சிதரும் சிவன், பழநி பெரியநாயகி அம்பாள் கோயிலில் பாதி லிங்க வடிவிலும், அதற்கு மேல் உருவ வடிவிலும் காட்சி தருகிறார். இக்கோயில் கோபுரவாசலை அடுத்துள்ள மண்டபத்தின் ஒரு தூணில் இவரைக் காணலாம். ஆவுடையாரின் மேல் லிங்கத்தின் பாணமும், பாணத்தின் மேல் சிவன் தியான கோலத்தில் இடுப்பு வரையில் காட்சி தருவதையும் காண முடியும். சிவனின் இத்தகைய அமைப்பை காண்பது அபூர்வம்.