பிரதோஷ வேளையில் சிவன் கோயில்களில் சுவாமிக்கும், நந்திக்கு விசேஷ அபிஷேகம், பூஜை நடக்கும். சிவன் ரிஷப வாகனத்தில் எழுந்தருளுவார். ஆனால், திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் பிரதோஷத்தின் போது சிவனுக்கும், காந்திமதி அம்பாளுக்கும் தனித்தனியே பிரதோஷ பூஜை நடக்கிறது. அப்போது அம்பாள் சன்னதி முன்புள்ள நந்திக்கும் பூஜை செய்யப்படுகிறது. அதன்பின்பு அம்பாள் ரிஷப வாகனத்தில் எழுந்தருளுகிறாள். சிவமும், சக்தியும் வேறில்லை என்பதை உணர்த்தும் விதமாக இவ்வாறு செய்யப்படுகிறது.