பதிவு செய்த நாள்
20
பிப்
2014
11:02
உடுமலை : உடுமலை திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவிலில், மகாசிவராத்திரி விழா வரும்27ம் தேதி நடக்கிறது. உடுமலை திருமூர்த்திமலையில், மும்மூர்த்திகள் ஒருங்கே அமைந்த அமணலிங்கேஸ்வரர் கோவிலில் உள்ளது. கோவிலில், மகாசிவராத்திரி விழா சுற்றுப்பகுதி மக்களால் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு சிவராத்திரி விழா வரும் 26ம் தேதி துவங்குகிறது. அன்று இரவு 8:00 மணிக்கு, பூலாங்கிணறு கிராமத்தில், திருச்சப்பர பூஜை நடக்கிறது. 27ம் தேதி மாலை 4:00 மணிக்கு, பூலாங்கிணறு கிராமத்திலிருந்து திருச்சப்பரம் திருக்கோவிலுக்கு செல்கிறது. இரவு 8:00 மணிக்கு கோவிலில், புண்யாகவாசனம், முதற்கால பூஜை, அபிேஷகம் தீபாராதனை ஆகிய சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. அதிகாலை 2:00 மணிக்கு மூன்றாம் கால பூஜையும், 4:00 மணிக்கு நான்காம் கால பூஜை, 5:00 மணிக்கு சிறப்பு அலங்காரம், சோடச உபசார தீபாராதனை ஆகிய பூஜைகள் நடக்கின்றன. விழாவையொட்டி, கோவில் வளாகத்தில் இரவு முழுவதும் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடக்கிறது. மங்கள இசை, பக்தி இன்னிசை, பாட்டும் பரதமும், நாட்டுப்புற கதைப்பாட்டு, பக்தி மெல்லிசை ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கின்றன. 27ம் தேதி இரவு முழுவதும் உடுமலை, பொள்ளாச்சியிலிருந்து திருமூர்த்திமலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து அறநிலையத்துறையினர் செய்து வருகின்றனர்.