காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாளுக்கு வைர கிரீடம் காணிக்கையாக வழங்கப்பட்டது. காஞ்சிபுரம் நகரில், பிரசித்த பெற்ற வரதராஜ பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இந்து சம்ய அறநிலையதுறை கட்டுப்பாட்டில் கோவில் உள்ளது. இந்நிலையில், கோவிலில் உள்ள உற்சவர் சுவாமிக்கு, பெங்களூரை சேர்ந்த பக்தர் ஒருவர் 50 லட்சம் மதிப்பிலான வைர கிரீடம் மற்றும் வைரகல் பதித்த அட்டிகை ஆகியவற்றை, காணிக்கையாக வழங்கினார். மேலும், கிரீடம் நேற்று காலை கோவில் நிர்வாகத்திடம் நேற்று ஒப்படைக்கப்பட்டு, பல்லக்கில் மாடவீதிகளில் ஊர்வலமாக எடுத்து வரபட்டது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.