கம்மாபுரம்: கம்மாபுரம் அடுத்த கொம்பாடிக்குப்பம் பொன்னாலகரம் திரவுபதி அம்மன் கோவிலில், தீ மிதி உற்சவம் நடந்தது. கடந்த 6ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, இரவு சுவாமி வீதியுலா, மகாபாரத கலை நிகழ்ச்சிகள் நடந்து வந்தது. 18ம் தேதி தீமிதி உற்சவத்தையொட்டி, காலை 10:00 மணிக்கு அரவாண் கடபலி, பகல் 12:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. மாலை 5:30 மணியளவில் ஏராளமான பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து மஞ்சள் நீர் உற்சவம் நடந்தது. ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர்.