Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மதுரை மீனாட்சி கோயிலுக்கு அபிஷேக ... இறைவன் அருளை பெற இப்படியும் ஒரு வழி! இறைவன் அருளை பெற இப்படியும் ஒரு வழி!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பிரபஞ்ச சக்தியினை ஒருமுகப்படுத்தும்... பிரமிடு கோயில்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

22 பிப்
2014
10:02

ஆலாவூரணி கரை: திருத்தங்கலில் 200 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர் சித்தர் ஆறுமுகத்தம்பிரான். இவர், தெய்வ பக்தியில் சிறந்து, மக்களின் நோய் தீர்க்க,சித்த மருந்துகளையும் வழங்கி உள்ளார். இவர், காவடி ஏந்தி காணிக்கை பெற்று, தைபூச நாளில், பக்தர்களோடு பழநி சென்று முருகனை வழிபடுவார். ஒருமுறை செவல்பட்டி ஜமீன்தாரரிடம் காணிக்கை பெற சென்றபோது, அவரை, ஜமீன்தாரர் மதிக்காமல், ஊரை விட்டு வெளியேற்றினார். சில நாட்களில், ஜமீன்தார் கை, கால் செயலற்று, வயிற்றுவலியால் அவதிப்பட்டார். தனது தவறை உணர்ந்த ஜமீன்தார், ஆறுமுகத்தம்பிரானை வரவழைத்து மன்னிப்பு கோரி, தனது நோயை தீர்க்க வேண்டினார்.  அவருக்கு மருத்துவம் செய்து குணப்படுத்தினார். பின்னர் அன்னதானத்திற்கான பொருட்கள் அனைத்தும், ஜமீன்தாரே வழங்கி அருள் பெற்றார். பாதயாத்திரை சென்ற போது, ஒட்டன்சத்திரம், விருப்பாச்சி தலைகுத்தாறு ஆற்றில், வெள்ளம் பெருக்கால் பாதயாத்திரை சென்றவர்கள்,கடந்து செல்ல முடியாமல் தவித்தனர். காவடியுடன் வந்த சித்தர் ,ஒரு சிட்டிகை விபூதியை ஆற்றில் போட்டு, பிரம்பால் நீரை தொட்டவுடன், சீறிபாய்ந்த வெள்ளம் குறைந்து, பக்தர்கள் செல்ல வழி பிறந்துள்ளது. இதுவும், அவரது பெருமைகளில் ஒன்றாகும். இவர், திருத்தங்கலில் பழனியாண்டவர் கோயிலையும் ஏற்படுத்தினார். இவரது வம்சாவழியினர், சித்தர் ஜீவசமாதி அடைந்த ஆலாவூரணி கரையில் ,கோயில் எழுப்பி வழிபடுகின்றனர்.  இங்குள்ள முருகனுக்கு, பால்குடம், காவடி வழிபாடு செய்தும், மறுநாள் அன்னதானமும் செய்கின்றனர். அன்னதான பிரசாதத்தையே, மருந்தாக கருதி, பலரும் இன்றும் சாப்பிட்டு செல்கின்றனர்.  இந்த கோயிலை, 2010ல் பிரமிடு கோயிலாக உருவாக்கி உள்ளனர். இக் கோயில் பிரகாரத்தில், 9 இடங்கள் பிரமிடுகள் அமைத்து, அதை காப்பர் உலோகத்தால் இணைத்தும், கோபுரங்கள் பிரமிடுகளாக வடிவமைத்துள்ளனர். பிரமிடுகள் நவக்கிரக சக்தியை நிலை நிறுத்தக் கூடியது.  இங்கு குறைந்தபட்சம் 24 நிமிடங்கள் அமர்ந்து தியானம் செய்தால்,மனம் ஒருநிலைப்பட்டு அமைதி பெறும். ஆகாயத்தில் உள்ள ஆகஷமான சக்தியையும், பூமியின் பிரபஞ்ச சக்தியையும் நிலை நிறுத்தி நற்பலனை அனுபவிக்கலாம் என்கிறார், கோயில் நிர்வாகி ஜெகதீசன். பிரமீடு சக்தியினை உணர்ந்த பலரும், கோயிலில் தியானம் செய்து செல்கின்றனர். கோயில் தினமும் மாலை 6 மணி முதல் இரவு 8.30 மணிவரை திறந்து இருக்கும். தைபூச மறுநாள் சிறப்பு பூஜை, அன்னதானம் நடக்கிறது. சித்தர் ஆறுமுகத்தம்பிரான் கோயில் மகத்துவம், பிரமீடு தியான சிறப்பு விபரங்களை அறிய, 94433 30447 ல் தொடர்பு கொள்ளலாம்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி;  ஜனாதிபதி திரௌபதி முர்மு திருமலையில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி இன்று தரிசனம் ... மேலும்
 
temple news
டில்லி; டில்லியில் விஜய யாத்திரை மேற்கொண்டுள்ள சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீட ஜகத்குரு ஸ்ரீ விதுசேகர பாரதீ ... மேலும்
 
temple news
கோவை;  கார்த்திகை மாதம் அனுஷம் நட்சத்திரத்தை முன்னிட்டு கோவை வடவள்ளி கஸ்தூரி நாயக்கன்பாளையம் கே. எஸ். ... மேலும்
 
temple news
பல்லடம்; பல்லடம் அருகே, கோர்ட் உத்தரவை பின்பற்றி, கோவிலை இடிக்கச் சென்ற அதிகாரிகளுடன், பொதுமக்கள் ... மேலும்
 
temple news
சிவன் தன் தலையின் பிறைச்சந்திரனுக்கு இடம் கொடுத்துள்ளார். இன்று சந்திர தரிசனம் செய்வதால் ஆரோக்கியம், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar