பதிவு செய்த நாள்
22
பிப்
2014
10:02
மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் மகா சிவராத்திரி விழா, பிப்., 27 இரவு முதல், பிப்., 28 அதிகாலை வரை நடைபெறும். அம்மன், சுவாமி மற்றும் உற்சவர் சன்னதிகளில், தொடர்ந்து அபிஷேகம், ஆராதனை நடைபெறும். இதற்கு பால், தயிர், இளநீர், பன்னீர், பழங்கள், தேன், மஞ்சள் பொடி, எண்ணெய், நெய் பொருட்களை, பிப்., 27 மாலைக்குள், கோயில் உள்துறை கண்காணிப்பாளரிடம் வழங்கலாம், என, கோயில் இணை கமிஷனர் ஜெயராமன் தெரிவித்துள்ளார்.