காரைக்கால்: தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, காரைக்கால் நித்தீஸ்வர சுவாமி கோயிலில் உள்ள காலபைரவருக்கு விபூதி சந்தனக் காப்பு அலங்காரம் சனிக்கிழமை நடைபெற்றது. தேய்பிறை அஷ்டமி நாளான சனிக்கிழமை காலபைரவருக்கு, மஞ்சள், பால், சந்தனம், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்டவற்றால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.