விருத்தாசலம்: விருத்தாசலத்தில் சமயபுரம் மாரியம்மனுக்கு நேற்று தீர்த்தக் குட ஊர்வலம் நடைபெற்றது. பக்தர்கள் சமயபுரம் மாரியம்மனுக்கு விரதம் இருந்து நேற்று மஞ்சளாடை அணிந்து விருத்தாசலம் மணிமுத்தாற்றிலிருந்து புனிதநீர் எடுத்துச் சென்றனர். இதனையடுத்து, சமயபுரத்து மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டன.