செஞ்சி : பா.ஜ., கட்சியினர் சர்தார் வல்லபாய் பட்டேல் சிலை அமைக்க கிராமங்களில் சேகரித்த கொழுவுக்கு மேல்மலையனுார் கோவிலில் பூஜை நடத்தி சென்னைக்கு அனுப்பி வைத்தனர். மேல்மலையனுார் ஒன்றிய பா.ஜ., சார்பில் நடந்த இல்லம் தோறும் மோடி, உள்ளம் தோறும் தாமரை யாத்திரையின் போது 36 கிராமங்களில் விவசாயிகள் பயன்படுத்திய கொழுவை சர்தார் வல்லபாய் பட்டேல் சிலை நிறுவ சேகரித்தனர். இந்த கொழுவுக்கு மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் பூஜை நடத்தி சென்னைக்கு அனுப்பினர். மாவட்ட மீனவரணி செயலாளர் ராஜகோபால் தலைமை தாங்கினார். ஒன்றிய தலைவர் குமார், பொது செயலாளர் சீனிவாசன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் துரைராஜ், ஒன்றிய துணை தலைவர் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மனோகரன் வரவேற்றார். நிர்வாகிகள் ஏழுமலை, செல்வம், முரளி, பாண்டுரங்கன், ராஜா கண்ணு உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.