பதிவு செய்த நாள்
25
பிப்
2014
10:02
தஞ்சாவூர்: முதல்வர் ஜெ., 66வது பிறந்தநாளை முன்னிட்டு, தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை, வழிபாட்டில் மேயர், எம்.எல்.ஏ.,க்கள் உள்பட அ.தி.மு.க.,வினர் திரளாக பங்கேற்றனர். தொடர்ந்து, நலத்திட்ட உதவிகளை ஏழை, எளியோருக்கு வழங்கி கோலாலமாக கொண்டாடினர். தஞ்சையில், முதல்வர் ஜெ., 66வது பிறந்தநாள் விழாவை அ.தி.மு.க.,வினர் வெகுவிமரிசையாக கொண்டாடினர். தஞ்சையை அடுத்த புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் நேற்றுக்காலை மணிக்கு சிறப்பு பூஜை, வழிபாடு நடந்தது. இதில், அ.தி.மு.க., விவசாய பிரிவு தலைவர் துரை கோவிந்தராஜன், மாநகராட்சி மேயர் சாவித்திரி, எம்.எல்.ஏ.,க்கள் ரங்கசாமி, ரத்தினசாமி, தஞ்சை மாவட்ட பால்வளத்துறை தலைவர் காந்தி, ஒன்றிய செயலாளர் துரை வீரணன், பொதுக்குழு உறுப்பினர் கவிதா, தஞ்சை தெற்கு மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற பொருளாளர் மாரிமுத்து உள்பட பலர் பங்கேற்றனர். முன்னதாக, தஞ்சை வடக்கு, தெற்கு மாவட்ட விவசாய பிரிவு சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. இதில், மாநில விவசாய பிரிவு தலைவர் துரைகோவிந்தராஜன், மாவட்ட விவசாய பிரிவு தலைவர் அண்ணாமலை, இணை செயலாளர்கள் அய்யப்பன், கலியபெருமாள், ராஜமன்னார், பாண்டியன், மகேந்திரன், சங்கர், மனோகரன், மோகனசுந்தரம் உள்பட பலர் பங்கேற்றனர். தொடர்ந்து, நலத்திட்ட உதவிகளை மாநில விவசாய பிரிவு செயலாளரும், குடிசை மாற்றுவாரிய தலைவருமான தங்கமுத்து, எம்.எல்.ஏ.,க்கள் ரங்கசாமி, ரத்தினசாமி, துரைக்கண்ணு வழங்கினர். விழாவில், 300 பேருக்கு புடவை, 200 பேருக்கு வேஷ்டி, 100 பேருக்கு போர்வை, 66 பேருக்கு மண்வெட்டி, கடப்பாறை, எவர்சில்வர் குடம், சாந்து சட்டி, மூக்கு கண்ணாடி உள்பட பொருட்களை இலவசமாக வழங்கினர். விழாவில், மேயர் சாவித்திரி, மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் துரை திருஞானம், பால்வளத்துறை தலைவர் காந்தி, மாநில வக்கீல் பிரிவு இணை செயலாளர் தங்கப்பன், முன்னாள் எம்.எல்.ஏ., ராஜேந்திரன், பஞ்., தலைவரும் அ.தி.மு.க., தஞ்சை எம்.பி., தொகுதி வேட்பாளருமான பரசுராமன், மனோகரன், முகாம் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் கண்ணன், தஞ்சை தெற்கு மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற பொருளாளர் மாரிமுத்து உள்பட பலர் பங்கேற்றனர். முன்னதாக, மாவட்ட விவசாய பிரிவு செயலாளர் அசோகன் வரவேற்றார். விவசாய பிரிவு செயலாளர் சாமியய்யா நன்றி கூறினார்.