பதிவு செய்த நாள்
26
பிப்
2014
11:02
திருக்கோவிலூர்: திருவண்ணாமலை பகவான், யோகி ராம் சுரத்குமார் மகராஜின், 13ம் ஆண்டு ஆராதனை விழா, நேற்று துவங்கியது.காலை, 6:30 மணிக்கு மகாகணபதி ஹோமத்துடன் துவங்கிய நிலையில், 11:00 மணிக்கு பகவான் யோகி ராம்சுரத்குமார் மக ராஜுடன் ஏற்பட்ட அனுபவங்களை, பக்தர்கள் பகிர்ந்து கொண்டனர்.இன்று காலை, 6:30 மணிக்கு, மகன்யாசம் மற்றும் அதிஷ்டானத்தில் மகா அபிஷேகம், மகா தீபாராதனை நடக்கிறது. 9:00 மணிக்கு, தீர்த்த நாராயண பூஜையும், பகல், 11:00 மணிக்கு, பக்தர்களின் பஜனையும், இரவு, 8:15 மணிக்கு, பகவானின் உற்சவ மூர்த்தியுடன், வெள்ளி ரதத்தில் ஊர்வலம் நடக்கிறது.