பதிவு செய்த நாள்
28
பிப்
2014
11:02
திருத்தணி : அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில், மயானச்சூரை பிரம்மோற்சவ விழா, நேற்று மாலை, கொடியேற்றத்துடன் துவங்கியது.திருத்தணி, பழைய பஜார் தெருவில் அமைந்துள்ளது அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில். இக்கோவிலில், 12 நாட்கள் நடக்கும் மயானச்சூரை பிரம்மோற்சவ விழா நேற்று மாலை, 6:30 மணிக்கு கொடியேற்றுத்துடன் துவங்கியது. இந்த விழா, மார்ச்.10ம் தேதி வரை நடக்கிறது. உற்சவர் அம்மன் தினமும் இரவு, 7:30 மணிக்கு ஒவ்வொரு வாகனத்தில் எழுந்தருளி சிறப்பு அலங்காரத்தில் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.இன்று (28ம் தேதி) பகல், 1:00 மணிக்கு உற்சவர் அங்காள பரமேஸ்வரி அம்மன் சிங்க வாகனத்தில் வீதியுலா வந்து, நந்தி ஆற்றில் மயானச்சூரை நிகழ்ச்சி நடக்கிறது. மேலும், பிரம்மோற்சவ விழா முன்னிட்டு, தினமும் காலை, 10:00 மணிக்கு மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடத்தப்படுகிறது.
நிகழ்ச்சி நிரல்
தேதி நேரம் வாகன விசேடங்கள்
பிப். 28 பகல் 1:00 சிங்கவாகனம்,மயானச்சூரை
மார்ச் 1 இரவு ரிஷிபவாகனம்
2 இரவு நாகம வாகனம்
3 இரவு அன்ன வாகனம்
4 இரவு யானை வாகனம்
5 இரவு ரதோற்சவம்
6 இரவு குதிரை வாகனம்
7 இரவு புலி வாகனம்
8 இரவு கேடய வாகனம்
9 இரவு கொடி இறக்கம், வசந்தோற்சவம்,மஹா கும்பம், புஷ்பஅலங்காரம் 10 இரவு பாவாடைராயன் கும்பம்.