பக்த ஜனேஸ்வரர் கோவிலில் பிரதோஷ, சிவராத்திரி அபிஷேக வழிபாடு!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28பிப் 2014 11:02
உளுந்தூர்பேட்டை : எலவனாசூர்கோட்டை கிராம அர்த்தநாரீஸ்வரர் சுவாமி கோவில், திருநாவலூர் பக்த ஜனேஸ்வரர் கோவிலில் பிரதோஷ, சிவராத்திரி சிறப்பு அபிஷேக வழிபாடு நடந்தது.பிரதோஷத்தையொட்டி சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. மாலை 4.30 மணிக்கு நந்தீஸ்வர ருக்கும், அர்த்தநாரீஸ்வரருக்கும் அபிஷேக ஆராதனைகள் நடந்தன. சிறப்பு அலங்காரம் செய்து, தீபாரதனைகள் நடந்தது. பின், சிவராத்திரி சிறப்பு பூஜை வழிபாடுகள் நடந்தன. இந்த பூஜைகளில் பலர் நெய் விளக்கேற்றி வழிபட்டனர்.