கோத்தகிரி : கோத்தகிரி அளக்கரையில் மாகாளியம்மன் திருவிழா நேற்று முன்தினம் துவங்கியது. நேற்று முன்தினம் அம்மன் புகழ்பாடுதல் நிகழ்ச்சியுடன், சிறப்பு பூஜை நடந்தது. முக்கியத்திருவிழா நாளான நேற்று காலை 7.00 மணிக்கு, அம்மனுக்கு அலங்கார பூஜை, 7.30 மணிமுதல் 12.00 மணிவரை பஜனை, அம்மன் திருவீதி உலா, மாலை 6.15 மணிக்கு, மங்கள ஆராதனை நிகழ்ச்சி நடந்தது.ஏற்பாடுகளை, ஊர் தலைவர், விழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்துள்ளனர்.