கோவில்பட்டி பதினெட்டாம்படி கருப்பசாமி கோயில் கொடை விழா!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03மார் 2014 05:03
கோவில்பட்டி: இளையரசனேந்தல் பதினெட்டாம்படி கருப்பசாமி கோயிலின் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விழாவில், 21 அரிவாள்கள் மீது ஏறி நின்று சுவாமி பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். விழாவையொட்டி, சனிக்கிழமை காலை 7.35 மணிக்கு யாக சாலை பூஜைகள் தொடங்கின. தொடர்ந்து விநாயகர், அம்மன் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு அபிஷேகம் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றன.