சுபநிகழ்ச்சிகளில் இனிப்பை முதலில் சாப்பிடுவது ஏன்?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05மார் 2014 03:03
ஏதேனும் சுபநிகழ்ச்சியாகட்டும்...ஒரு நல்ல செய்தி நம் காதில் விழட்டும்... உடனே என்ன செய்கிறோம்! ஒரு சுவீட்டை எடுத்து அருகிலுள்ளவர் வாயில் ஊட்டுகிறோம். குறிப்பாக, திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகளில் இலையில் உப்புக்கு அடுத்தபடியாக முதலில் வைப்பது சுவீட்டாக இருக்கிறது. உப்பில் லட்சுமி வாசம் செய்வதாக ஐதீகம். அதனால் தான், கிரகப்பிரவேச வீட்டிற்கு செல்பவர்கள் உப்பு கொண்டு செல்கிறார்கள். சுவீட் கொடுத்தால் வாழ்க்கையே இனிமையாகும் என்று சொல்வது ஆன்மிக காரணம். அதற்கான அறிவியல் காரணம் என்ன! இலையில் வைக்கும் பதார்த்தங்களில் முதலில் ஸ்வீட்டை சாப்பிடுஎன்று பெரியவர்கள் சொல்கிறார்கள். காரணம், இனிப்புச்சுவை இரைப்பையையும், மண்ணீரலையும் அதற்குரிய வேலையைச் செய்யத் தூண்டுகிறது. இனிப்பை முதலில் சாப்பிட்டால், தொடர்ந்து சாப்பிடும் உணவு நன்றாக ஜீரணமாகும். அதற்காக, இலையில் வைக்கும் முழு இனிப்பையும் சாப்பிட வேண்டும் என்று கட்டாயமில்லை. ஒரு சிறு துண்டை எடுத்துக் கொண்டு, இடையிடையே சாப்பிடலாம். பார்த்தீர்களா! விருந்து சாப்பாடு என்றால், கொஞ்சம் அதிகமாகவே வெட்டி விடுவோம். வயிறு உப்பலாக இருக்கும். சாப்பிட்டதை ஜீரணிக்கச் செய்யவே இந்த ஏற்பாடு! பி.கு.: சர்க்கரை இருந்தால் இந்த செய்தி உங்களுக்கானது அல்ல!