பண்ருட்டி: கடலூர் மாவட்டம், பண்ருட்டி, திருவதிகையில் மாசானி அம்மன் கோவில் மகாகும்பாபிஷேகம் இன்று நடக்கிறது. விழாவை முன்னிட்டு நேற்று 11ம் தேதி காலைவிநாயகர், வழிபாடுஹோமம், மாலை வாஸ்துசாந்தி, யாகசாலை பூஜைகள் துவங்கி இரவு 8:00மணிக்கு பூர்ணாகுதி தீபாராதனை நடந்தது.இன்று 12ம் தேதி காலை6:00 மணிக்கு 2ம் கால யாகசாலை பூஜை, ஹோமம்மற்றும் தீபாராதனைநடந்து, தொடர்ந்து 10:00மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.விழா ஏற்பாடுகளை பந்தல் அமைப்பாளர் கதிர்வேல் மற்றும்அப்பகுதி மக்கள் செய்து வருகின்றனர்.