மதுரை மீனாட்சி அம்மன் கிழக்கு ராஜகோபுரம்.. நாளை கும்பாபிஷேகம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18மார் 2014 03:03
மதுரை: மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் கடந்த டிசம்பரில் இடி தாக்கி சேதமடைந்த கிழக்குக் கோபுரம் சீரமைக்கப்பட்டு நாளை (19ம் தேதி) காலை கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கம்பத்தடி மண்டபம் அருகே யாகசாலை அமைக்கப்பட்டுள்ளது. இன்று இரவு முதல் யாகசாலையில் கலசங்கள் வைக்கப்பட்டு பூஜைகள் தொடங்குகின்றன. நாளை காலை கோபுரக் கலசத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.