கடத்தூர் கரியகாளியம்மன் கோவிலில் தீ மிதி திருவிழா!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21மார் 2014 03:03
கடத்தூர்: காசிப்பாளையத்தில் பிரசித்தி பெற்ற கரியகாளியம்மன் கோவிலில் குண்டம் விழா கடந்த 6ம்தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு அம்மனுக்கு தினமும் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. நேற்று அதிகாலை அம்மை அழைத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. காலை 6 மணி அளவில் தலைமை பூசாரி சிறப்பு பூஜைகள் செய்து முதலில் குண்டம் இறங்கினார். தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் குண்டம் இறங்கினர்.